வெகுநாளாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் முகம் காட்டாமல் இருந்து வந்தவர்தான் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் என்ட்ரீ கொடுப்பதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு சீரியல் என்னவென்றால் அது கண்ணான கண்ணே சீரியல்தான் தற்போது இந்த சீரியல் ஆனது ரசிகர் மத்தியில் நீங்காத இடம்பிடித்ததுமட்டுமல்லாமல் டிஆர்பி யிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது.
இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆனது தந்தை மகள் ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும் இந்த சீரியலில் தந்தை கதாபாத்திரத்தில் பப்லு மற்றும் ஹீரோவாக ராகுல் ரவி கதாநாயகியாக நிமிஷா நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது போலீஸ் கதாபாத்திரத்தில் என்ட்ரியாக உள்ள நடிகைதான் காஜல் பசுபதி. இந்நிலையில் இவருடைய வரவேற்பை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவது மட்டும் இல்லாமல் சீரியல் சூட்டிங் ஸ்பாட் மிகவும் கலகலப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சீரியலின் அடுத்த அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகருடன் காஜல் பசுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.