Sandy Master dance On The Road: தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த டான்ஸ் மாஸ்டராக வலம் வந்து கொண்டிருப்பவர் சாண்டி. இவரை கலா மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். இவர் அதிக ரியாலிட்டி ஷோவில் நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் காஜல் என்ற தொகுப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.
சில வருடங்களுக்கு முன்பு சில்வியா என்கின்ற பெண்ணை மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்ற வருடம் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் இவர் கலந்து கொண்டார். அதில் இரண்டாவது இடத்தை பெற்றார். இதன் மூலம் பிக்பாஸில் அவர் செய்த சேட்டைகள் மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு பிடித்தவராக உள்ளார். அதிலும் அவருடைய குழந்தை லாலா அனைவருக்கும் பிடித்தவராக அறிமுகமானார்.
தற்பொழுது இவர் லண்டன் ரோட்டில் நடனமாடியுள்ளார் அப்பொழுது போலீசை பார்த்ததும் தெறித்து ஓடி உள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Sandy #Dancer pic.twitter.com/lEuy0MtbQB
— Tamil360Newz (@tamil360newz) April 28, 2020