முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் சாண்டி!! அவருடன் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா…

saandi
saandi

Sandy introduce as a hero for the first time !! Do you know who are the celebrities who join him: உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சாண்டி இவர் பிக்பாஸில் பிறகு வெள்ளித்திரையில் ஹீரோவாக அவதாரம் எடுக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார்.

மேலும் இவருடன் நண்பராக பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற சரவணன் மற்றும் ரேஷ்மா இருவரும் இவர் ஹீரோவாக நடிக்க உள்ள திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

இயக்குனர் சந்துரு இயக்கும் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தான் சாண்டி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

சாண்டி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் இந்த திரைப்படத்தை சந்துருவின் சகோதரி தயாரிக்கிறார்.

என தகவல்கள் வெளிவந்துள்ளது படத்திற்கான ஷூட்டிங் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.