எக்ஸாம் ட்ரெய்னிங் எதுவும் இன்றி காக்கிச்சட்டையில் சந்தியா..! ராஜா ராணி சீரியல் இயக்குனரை காரித்துப்பும் ரசிகர்கள்..!

raja-rani-1
raja-rani-1

விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு சீரியல் என்றால் அது ராஜா ராணி இரண்டாம் பாகம் சீரியல் தான் இந்த சீரியலின் சமீபத்திய புரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது.  அந்த வகையில் சென்னையில் நடக்கும் சமையல் போட்டியில் கலந்துகொள்ள சந்தியா மற்றும் சரவணன் இருவரும் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் இருவரும் ஒரு கடையில் நின்று ஜூஸ் குடித்து கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த கார் ஒன்று ஒரு குழந்தையின் மீது மோதி விட்டு சென்றுவிட்டது. இதனை பார்த்த சரவணன் அந்த குழந்தையை உடனே ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ஆனால் சந்தியா மருத்துவமனைக்கு செல்லாமல் குழந்தையின் மீது மோதிய கார் எங்கே சென்றது என்பதை கண்டுபிடிப்பதற்காக ஒரு ஆட்டோவில் ஏறி செல்கிறார்.  இவ்வாறு அந்த காரை கண்டுபிடித்தவுடன் சரவணனுக்கு தகவல் தெரிவிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தான் பெரிய பயில்வான் என்பது போல சந்தியா அந்த ரவுடியின் வீட்டு கதவை தட்டுகிறார் இவ்வாறு அவர் கதவை தட்டியவுடன் அங்கிருந்து பல்வேறு ரவுடிகள் வெளி வருகிறார்கள். அதேபோல சரவணனும் போலீஸ் அதிகாரிகளுடன் அந்த வீட்டிற்குள் வருகிறார்.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். இவ்வாறு நடந்த சம்பவத்தை பார்த்த கமிஷனர் அவர்கள் சந்தியாவிற்கு போன் செய்து அவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல் நீங்கள் போலீசில் இருக்க வேண்டிய ஆள் எப்பொழுது வேலையில் ஜாயின் செய்து கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

உடனே மகிழ்ச்சியுடன் காக்கி சட்டை அணிந்து கொண்டு ரவுடிகளை துவம்சம் செய்வது போல ஒரு காட்சி ப்ரோமோவாக வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது ஏனெனில் நம் நாட்டில் பல்வேறு திறமை கொண்டும் போலீஸ் வேலை கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள் இந்நிலையில் கதைக்காக எக்ஸாம் கூட எழுதாமல் தமிழக அரசு அவருக்கு போலீஸ் வேலை கொடுப்பது போல காட்சி எடுக்கப்படுகிறது இது நியாயமா என ரசிகர்கள் கேள்வி வைத்து உள்ளார்கள்.