விஜயகாந்த் அடக்கம் செய்த சந்தன பேழை எவ்வளவு தெரியுமா.? எம் ஜி ஆர் க்கு செய்தவர் தான் இதையும் செய்தாரா.?

vijayakanth santhana pezhai
vijayakanth santhana pezhai

vijayakanth : தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதனாக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் உதவி என்று தேடி வந்தவர்களுக்கும் சரி உதவி என நினைப்பவர்களுக்கும் சரி வாரி வாரி உதவி செய்தவர்தான் விஜயகாந்த். இன்று உள்ள பல நடிகர் நடிகைகள் விஜயகாந்த் தயவால் ஏதாவது ஒரு விஷயத்தில் நன்மையை அடைந்திருப்பார்கள் அதனை பல பேர் பேட்டிகளில் அவர்களே கூறியுள்ளார்கள்.

அந்த அளவு கருணை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த் அதேபோல் இல்லாதவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்.  ஒவ்வொரு மனிதர்களின் நெஞ்சில் குடியிருக்கும் விஜயகாந்த் திடீரென டிசம்பர் 28ஆம் தேதி காலை 6.10 மணிக்கு காலமானார். இவரின் மரணம் சினிமா உலகினரை மட்டுமல்லாமல் சாமானிய மனிதர்களையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கையில் குத்தி இருக்கும் டாட்டூவை கவனித்தீர்களா.?

மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை அளித்து சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார் அதேபோல் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயம்பேட்டில் இருக்கும் அவருடைய கட்சி அலுவலகத்தில் தான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் அடக்கம் செய்த சந்தன பேழை விலை எவ்வளவு தெரியுமா..

நடிகர் விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டது அந்த சந்தன பேழை இரண்டு பக்கமும் கேப்டன் என எழுதப்பட்டிருந்தது அதுமட்டுமில்லாமல் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என பெயரும் அவர் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு பதிக்கப்பட்டிருந்தது அந்த சந்தன பேழை பற்றி விவரங்கள் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

The Greatest of all times : Thalapathy 68 டைட்டிலுடன் வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..! இதுதான் புத்தாண்டு ஸ்பெஷல்..

அதாவது விஜயகாந்தை அடக்கம் செய்த சந்தன பேழை செய்வதற்கு சுமார் 1.25 லட்சம் ரூபாய் முதலில் கேட்டுள்ளார்கள் அதன் பிறகு இறுதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது இந்த சந்தன பேழை செய்தவர் ஏற்கனவே எம்ஜிஆர் அண்ணா உள்ளிட்ட பல தலைவர்களுக்கு செய்து கொடுத்தவர் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.