தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக வலம் வருபவர்கள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் மீனா ஷாலினி போன்ற பல்வேறு முன்னணி நடிகைகளும் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார்கள்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து கலக்கிக் கொண்டு வருபவர் தான் நடிகை மோனிகா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகு என்ற திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நமது நடிகை தளபதி விஜய்யின் பகவதி திரைப்படத்திலும் நடிகர் விஷாலின் சண்டக்கோழி திரைப்படத்திலும் குணசித்திர வேடத்தில் நடித்து தன்னைத்தானே பிரபலபடுத்திக் கொண்டார்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் புகழை உருவாக்கியது. மேலும் இவருடைய உண்மையான பெயர் மாருதி ராஜ் ஆனால் திருமணத்திற்காக தன்னுடைய பெயரை மோனிகா என மாற்றிக் கொண்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2014ஆம் ஆண்டு இந்துவாக இருந்த தன்னுடைய மதத்தை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் இவ்வாறு மதம் மாறிய பிறகு தன்னுடைய பெயரையும் ரஹீமா என மோனிகா மாற்றிக்கொண்டார். அந்த வகையில் நமது நடிகை நான் இஸ்லாம் மதத்தை கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே பின்பற்றுகிறேன்.
மேலும் என்னுடைய தந்தை ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் அதேபோல என்னுடைய தாயார் ஒரு இந்து மதத்தை சார்ந்தவர் ஆகையால் நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன் மேலும் நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது ஆகையால் தான் நான் பர்தா அணிய ஆரம்பித்தேன்
இவ்வாறு இந்த உடை அணிவதன் காரணமாக எனக்கு சவுகரியமாக வும் சுதந்திரமாகவும் இருந்தது என்று கூறியிருந்தார் மேலும் அவர் 2015ஆம் ஆண்டு மாலிக் என்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் தெரிந்தது இவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக தான் நமது நடிகை இந்த மதத்திற்கு மாறியுள்ளார் என்பதே நமது நடிகை திருமணத்துக்கு பிறகு சமூகவலைதள பக்கத்திலும் சரி சினிமா பக்கத்திலும் சரி தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.