விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்பொழுது தான் பிக்பாஸ் சீசன் போர் நடந்து முடிந்தது.
பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் பிரபலம் அடைந்து விடுவார்கள். ஆனால் ஒரு சில ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நீங்கா இடம் பிடித்துவிடுவார்கள்.
அந்தவகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சனம் செட்டி இவர் பிக் பாஸ் சீசன்4 ல் கலந்து கொண்டார் இவர் வெற்றியாளராக ஆகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இறுதியாக பிக்பாஸ் முடியும் கட்டத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் ரீ என்றி கொடுத்தார்கள் அவ்வபோது சனம் ஷெட்டி வகுடில் குங்குமம் வைத்திருந்ததால் இவருக்கு ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதோ என்று ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தார்கள்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் நேரடியாக சனம் ஷெட்டியிடம் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டதற்கு சனம் ஷெட்டி இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை விரைவில் உங்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடக்கும் என்று பதிலளித்துள்ளார்.