நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக ஹச்.வினோத்துடன் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார். இதுவரை நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்துடன் கைகோர்த்து அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இந்தப் படத்தில் அஜித் இரண்டு விதமான ரோடில் நடிக்கிறார்.
ஒன்னு வெள்ளை முடியுடன் மற்றொன்று கருப்பு முடிவுடன் அஜித் நடிப்பதாக சொல்லப்படுகிறது இந்த படத்தின் சூட்டிங் மூன்று கட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் படக்குழு இறுதி கட்டத்திற்கு வெளிநாடு செல்ல இருக்கிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் வீரா, சமுத்திரகனி.
மற்றும் யோகி பாபு அஜய், மகாநதி சங்கர் மற்றும் பலர் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளதாம். அதை உறுதிப்படுத்தும் வகையில் AK 61 படக் குழு நேற்று படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை ரிலீஸ் செய்தது இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அஜித் துப்பாக்கி உடன் இருக்கும் போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேனர் கட்டவுட் என வைத்து ஒரு பக்கம் வீடியோக்களை வெளியிட மறுபக்கம் சோசியல் மீடியாக்களில் சினிமா பிரபலங்களும் இந்த போஸ்டரை இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலைமையில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி..
தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு துணிவு வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் துணிவு படத்தில் அஜித்துடன் கைகோர்த்து சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
துணிவு..💪💪💪💪💪💪💪💪💪💪💪வெல்வோம்….. pic.twitter.com/TdG8CboL8s
— P.samuthirakani (@thondankani) September 21, 2022