நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். தற்பொழுது கூட வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து கதை உருவாகுவதால் நடிகர் அஜித்குமார்.
20 லிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து ஒரு புதிய லுக்கில் இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் மட்டுமே அஜித் பல்வேறு கெட்டப்பில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது.
இதற்கு இடையில் நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் சுற்றி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்தின் 61வது திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியார், இளம் நடிகர் வீரா இவர்களின் புகைப்படங்கள் கூட வெளிவந்தன ஆனால் சமுத்திரகனி.
இந்த படத்தில் நடிக்கிறார் என்று சொன்னாலும் அவரது புகைப்படம் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமுத்திரகனி தனது ரசிகர் உடன் இன்று எடுத்துக் கொண்ட ஒரு மாசான புகைப்படம் இணையதள பக்கத்தில் வெளிவந்துள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது நிச்சயம் AK 61 படம் அஜித்துக்கும் சரி உங்களுக்கும் சரி ஒரு சிறந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.