ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் அழகு குறையாத சாமுராய் பட நடிகை.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

samurai-actress
samurai-actress

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் சாமுராய். இந்த திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அனிதா ஹாசனந்தினி இவர் மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவர் சினிமாவில் முதன் முதலாக ஹிந்தி திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வந்தார். இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் தமிழில் இவர் முதன் முதலாக அறிமுகமானா திரைப்படம் சாமுராய் தான். ஆனால் சாமுராய் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் மனோஜ் அவர்களுடன் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படம் வெளியாகியது.

மேலும் இவர் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியாகிய சுக்கிரன் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுக்கிரன் திரைப்படத்தை விஜய்யின் தந்தை தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் அறிமுகமானார் அனிதா என  எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

தமிழில் கடைசியாக இவர் நாயகன், மஹாராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால் ஹிந்தி, கன்னடம் என மிகவும் பிஸியாக நடித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் டிவிக்களில் ஒளிபரப்ப பட்டு வந்த ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

ஒரு காலகட்டத்தில் 2013ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இந்த தம்பதிகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த ஆண் குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என பெயரை வைத்துள்ளார்கள். இந்த நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அனிதா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

samurai
samurai