தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் தற்பொழுது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி அன்று ஏராளமான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் துணிவு திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள்.
மேலும் துணிவு திரைப்படம் வெளியாகும் அன்றே தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் இருதரப்பு ரசிகர்களும் எங்கள் படம் தான் பெஸ்ட் என போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாகவும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பக்கா ஆக்சன் திரைப்படமாகவும் உருவாகி இருக்கிறது.
எனவே எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதில் அஜித் கூலான லுக்கில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இது திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சமுத்திரகனி ஏராளமான சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில் ஹச்.வினோத் அவர்களை சந்தித்து பேசியது பற்றி கூறியுள்ளார்.
அதாவது திடீரென ஒரு நாள் ஹைதராபாத்தில் வினோத் இருந்தார் நானும் ஹைதராபாத்தில் தான் இருந்தேன் வினோத் எனக்கு ஃபோனில் எங்கு இருக்கிறீர்கள் அண்ணே என்றார் நான் ஹைதராபாத்தில் தான் இருக்கிறேன் மாலை சந்திப்போமா என்றார் மாலை என்ன நீங்கள் எப்பொழுது எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் இப்பொழுதே வருகிறேன் என உடனே அங்கு போனேன் படப்பிடிப்பு தளத்திற்கான செட் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இயக்குனர் தம்பியுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது இதுதான் அந்த படம் என புத்தகத்தை கையில் கொடுத்தார். அங்கிருந்து கிளம்பி நான் அலுவலகத்திற்கு சொல்வதுக்குள் படித்து முடித்து விட்டேன் படித்து முடித்தவுடன் உடனடியாக திரும்பி சென்று வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் அதனுடைய மதிப்பு அதனுடைய சக்தி நமக்கு தெரியும் அல்லவா நாம் வைத்திருக்கக் கூடாது என்று அவரிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது தா ன் தம்பி சொன்னார்.
இந்த கமிஷனர் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் அண்ணா என்றார். மிகச் சிறப்பாக இருக்கிறது தம்பி படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை ஏனென்றால் இந்த வேகத்தில் தான் படமும் இருக்கும் என்று இருந்தது அதை படித்தவுடன் மிகவும் சந்தோஷமாகிவிட்டது அதிரடியான ஒரு முரட்டுத்தனமான ஆக்ஷன் இருக்கிறது அல்லவா… அதாவது ஜல்லிக்கட்டு மாதிரி அந்த மாதிரி தான் இருக்கும் படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் இது மிகவும் அற்புதமாக இருக்கிறது.
அந்த தளத்தில் நமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது அதை படித்த உடனே நீங்கள் நிறைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் இப்பொழுது நடந்தது போல் நடக்கக்கூடாது இப்பொழுது பேசுவது போல் பேசக்கூடாது வேறு ஒரு ஆளாக இருக்க வேண்டும் என தம்பி சொன்னார் உடனே தயாரானோம் என நடிகர் சமுத்திரக்கனி பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.