நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியாகிய அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் வெடி, வேட்டை, நடுநசி நாய்கள் என ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பின்பு சரியான பட வாய்ப்பு அமையாததால் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இதில் சமீரா ரெட்டியின் மகள் நைர செய்யும் கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றனர்.
சமீரா ரெட்டியின் மகளை சமீரா ரெட்டியின் கணவர் தூக்கி கொஞ்சம் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.