same time release ajith and vijay movies: தமிழ் சினிமாவின் மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வருபவர் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்களுடைய திரைப்படம் திரையரங்கில் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் ரசிகர் கூட்டத்துக்குள் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் ஒரே நேரத்தில் திரை உலகில் வெளிவந்த தல மற்றும் தளபதி திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..
வான்மதி மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படமானது சுமார் 150 நாட்களுக்கும் மேலாக ஓடி மாபெரும் வெற்றி கண்டன. இதுதான் திரையுலகில் அஜித்தும் விஜய்யும் மோதிக்கொண்ட முதல் திரைப்படம்.
கல்லூரி வாசல் மற்றும் பூவேஉனக்காக இவ்வாறு அஜித் மற்றும் விஜய் இரண்டாவதாக மோதிய இந்த திரைப்படத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டன ஆனால் அஜித் நடிப்பில் வெளிவந்த கல்லூரி வாசல் திரைப்படம் ஆனது படும் தோல்வியை சந்தித்தது ஆனால் இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டாவது கதாநாயகனாக நடித்ததன் காரணமாக இந்த தோல்வியை ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.
ரெட்டை ஜடை வயசு மற்றும் காதலுக்கு மரியாதை இவ்வாறு வெளிவந்த இந்த படத்திலும் அஜித் நடிப்பில் வெளியான ரெட்டை ஜடை வயசு திரைப்படமானது மாபெரும் தோல்வியை சந்தித்தது ஆனால் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற திரைப்படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்துவிட்டது.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் நிலவே வா ஆகிய இரண்டு திரைப்படங்களில் கார்த்திக் மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது ஆனால் விஜய் நடிப்பில் வெளியான நிலவே வா திரைப்படம் மாபெரும் சறுக்கலை சந்திக்க நேரிட்டது.
உன்னை தேடி மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் இந்த இரண்டு திரைப்படங்களில் அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்று தந்தது அதேபோல விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றன.
உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் குஷி இந்த இரண்டு திரைப்படங்களில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படமானது நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுவிட்டன.
தீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களில் அஜித் நடித்த தீனா திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தான் அஜித்திற்கு தல என பெயர் சூட்டப்பட்டது. அதே போல தான் விஜய் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படமும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று விட்டன இதனைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் இந்த இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துவிட்டது.
வில்லன் மற்றும் பகவதி என்ற இரண்டு திரைப்படங்களில் வில்லன் திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ஆனால் விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம் மனது ஆரம்பத்தில் ரசிகர்களை கவர்ந்தாலும் அதன்பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை தரவில்லை.
ஆஞ்சநேயா மற்றும் திருமலை இந்த இரண்டு திரைப்படங்களில் தல அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா திரைப்படமானது மாபெரும் சரிவை சந்தித்தது ஆனால் திரைப்படமானது மிகப்பெரிய வெற்றி பெற்று விஜய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டது.
பரமசிவன் மற்றும் ஆதி இந்த இரண்டு திரைப்படங்களில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த பரமசிவன் என்ற திரைப்படமானது ஓரளவு வெற்றியை பெற்றது ஆனால் விஜய் நடிப்பில் உருவான ஆதி திரைப்படம் ஆனது படுதோல்வியை சந்தித்தன.
ஆள்வர் மற்றும் போக்கிரி என்ற இரண்டு திரைப்படங்களில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படம் ஆனது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்த தான் காரணமாக மாபெரும் வெற்றியைப் பெற்றது ஆனால் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்காமல் தோல்வியை சந்தித்து விட்டன.
வீரம் மற்றும் ஜில்லா இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று தல மற்றும் தளபதிக்கு நல்ல பெருமையை சேர்ந்தது அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலகில் தல மற்றும் தளபதி ஆகிய இருவரும் கடைசியாக மோதிக்கொண்ட திரைப்படங்கள் என்றால் இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டும்தான் அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுவிட்டது.