தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் புதிதாக காதலித்தாலும் இன்னும் நயன்தாராவை விட்டு பழைய கிசுகிசுப்புகள் போகவில்லை நயன்தாரா முதன் முதலில் சிம்புவை காதலித்தார் அதன்பிறகு பிரபுதேவாவையும் காதலித்தார் இந்த காதல் மேட்டர் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
ஏதாவது ஒரு புது புது விஷயங்கள் வெளியாகி எப்பொழுதும் இவர்கள் கிசுகிசுபுக்கு சுவாரஸ்யத்தைக் கூடிக்கொண்டே செல்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சுவாரசியமான விஷயம் கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது நயன்தாரா காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் என்ன ஒரு சுவாரசியமான தகவல் என்றால் அதே பாண்டிச்சேரியில் தான் பிரபுதேவாவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தை குலேபகாவலி என்ற திரைப்படத்தை எடுத்த கல்யாண் புதிய திரைப்படத்தையும் விறுவிறுப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் என்ன ஒரு விஷயம் என்றால் பிரபுதேவா பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் அந்த ஹோட்டலில் பிரபுதேவா தங்கியிருக்கும் ரூம் பக்கத்திலேயே நயன்தாராவுக்கும் படக்குழுவினர் ரூம் போட்டு உள்ளார்களாம். அதுவும் ஒரே ப்ளோரில் பக்கத்து பக்கத்து ரூம் புக் செய்து விட்டார்களாம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இந்த விஷயம் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் தெரியாதாம்.
ஒரே ப்ளோரில் பக்கத்து பக்கத்து ரூம் இருப்பது அடுத்த நாள் தான் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு தெரிய வந்ததாம் இந்த விஷயம் தெரிந்த விக்னேஷ் சிவன் படத்தை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் நயன்தாராவை பிரபுதேவாவிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று தான் அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.