நடிகை ஐஸ்வர்யாராய் போல் இருக்கும் பெண்ணின் டிக் டாக் வீடியோ ஒன்று இணையதளங்களில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.
தமிழ்சினிமாவில் 1997 ஆம் ஆண்டு இருவர் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய் இதனைத்தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற அஜித் திரைப்படத்திலும் ஜீன்ஸ் திரைப்படத்திலும் நடித்திரந்தார் 2010 ஆம் ஆண்டு ராவணன், எந்திரன் என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் இவர் தமிழில் அதிக படம் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஒரே முகம் போல் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவார்கள் அந்த வகையில் ஐஸ்வர்யாவை போலவே இருக்கும் பெண்ணின் டிக் டாக் வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயும் மமுட்டியும் பேசிக்கொள்ளும் காட்சிகளை போலவே முகம் சாயல் கொண்ட பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிக லைக் பெற்று வருகிறது மேலும் இவரை சின்ன பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யாராய் என கமெண்ட் செய்து வருகின்றர்கள்.
Xerox ♥️?? pic.twitter.com/N3MEoPz35A
— மச்சக்கன்னி ❣ (@zoya_offcl) June 2, 2020