பொதுவாக சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர், நடிகைகளாக வளம் வந்து கொண்டிருக்கும் அனைவரின் மீதும் சர்ச்சை ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தாவின் மீது சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு சமந்தாவின் மேனேஜர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை சமந்தா அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை தெரிந்துக் கொண்ட சமந்தாவின் குழுவினர்கள் இது வெறும் வதந்தி தான் அதில் கூறும் எதுவும் உண்மை இல்லை என இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.
செப்டம்பர் 20ஆம் தேதி அன்று பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்த சமந்தாவின் மேலாளர் மகேந்திரா, நடிகை சமந்தா முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார் எனவும் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் சமந்தா சிகிச்சை எடுப்பதற்காக குஷி படத்திற்கு இடைவெளி விட்டதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சோசியல் மீடியாவில் இல்லாமல் இருந்து வருகிறார். இவ்வாறு இவர் இல்லாத காரணத்தினால் தான் பல வதந்திகள் உருவாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் யசோதா திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகையர் திலகம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் கடைசியாக தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.