முன்னணி நடிகர்களுக்கு நிகராக சமந்தாவின் யசோதா திரைப்படம் பெற்றுள்ள வசூல்.! வெறும் 10 நாளில் இத்தனை கோடியா..

yasoda
yasoda

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவருடைய கடுமையான உழைப்பினால் உருவாகியுள்ள திரைப்படம் தான் யசோதா. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 2ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சமந்தா தன்னுடைய கடின உழைப்பை செலுத்தியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹரி ஹரிஷ் இயக்கத்தில் உருவான யசோதா திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தினை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.

மணிஷர்மா இசையமைத்துள்ள உருவான இந்த படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்திருந்தார். இவ்வாறு சமந்தா கேரியரில் வெளியான தரமான திரைப்படம் என்றால் யசோதா திரைப்படத்தினை கூறலாம் இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி யசோதா திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இதனை யசோதா படத்தின் குழுவினர்கள் போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.