தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தமிழில் என்ட்ரி ஆன முதல் சில படங்களில் தனது திறமையை மட்டும் வெளிப்படுத்தி நடித்த சமந்தா பின்பு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும்போது சற்று கிளாமரையும் தூக்கி காண்பித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து தவிர்க்கமுடியாத ஒரு நாயகியாக வலம் வருகிறார்.
சமந்தா தற்போது தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஒரு கட்டத்தில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இருவரும் காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஓரிரு ஆண்டுகள் சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வந்த இருவரும் சென்ற ஆண்டு விவாகரத்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா முழுநேரமும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சமந்தா கனவுக்கன்னியாக வலம் வருகிறார். நேற்று சமந்தாவின் பிறந்த நாளில் தமிழில் இவர் நடித்து வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.
நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. மேலும் நேற்றைய நாளில் சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா நேற்று சமந்தாவின் பிறந்தநாளை அடுத்து அவர் நடித்து வரும் வெப்சீரிஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமேசான் பிரைமின் இந்தியா என்ற நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா அவர் நடிக்கும் வெப் சீரிஸை லான்ச் செய்துள்ளார். இந்த வெப்சீரிஸின் பெயர் தூதா இதில் நடிகர் நாகசைதன்யா மற்றும் மலையாள நடிகை பார்வதி திருவொத்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் மேலும் இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.