சமந்தா எடுத்த அதிரடி முடிவால் – மாட்டி தவிக்கும் youtube பக்கங்கள்.! வெளியான ஷாக்கிங் நியூஸ்.

samanatha
samanatha

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் சமந்தா ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஓடிக்கொண்டு இருந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா போன்ற உடன் கை கொடுத்ததன் காரணமாக இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர்.

அதன் விளைவாகவே இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் இப்படி சினிமாவிற்கு வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தெலுங்கு டாப் நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சினிமாவிலும் குடும்ப வாழ்க்கையிலும் சிறப்பாக இருந்தனர் மேலும் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி சூப்பர் ஜோடி என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் திடீரென யார் கண் பட்டதோ என்னவோ சில பிரச்சனைகளை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது.

இதனால் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த செய்தியை மீடியா உலகம் விடாமல் அவ்வப்போது தெரிந்த தகவல்களை வெளியிட்டு வந்தன ஆனால் ஒரு சில யூடியூப் பக்கங்கள் தவறான செய்தியை பரப்பியதால் முதலில் அமைதியாக இருந்த நடிகை சமந்தா.

திடீரென உணர்ச்சி வசப்பட்டு தற்போது அந்த யூடியூப் சேனல்கள் மீது புகார் தெரிவித்துள்ளார் இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது இதுவரை அவர் பத்துக்கும் மேற்பட்ட யூடியூப் பக்கங்கள் மீது அவர் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.