தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து பின் படிப்படியாக தனது திறமையின் மூலம் அனைத்து மொழிகளிலும் தற்போது வெற்றிநடை கொண்டு வருபவர் நடிகை சமந்தா. அதிலும் குறிப்பாக தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா உலகில் இவர் நடிப்பதையும் தாண்டி வெப்சீரிஸ் பக்கங்களிலும் அசத்துகிறார் அந்தவகையில் தி ஃபேமிலி மேன் 2 சீரிஸில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பட்டிதொட்டியெங்கும் இவரது பெயர் பரவியது போதாத குறைக்கு இவருக்கு சீரிஸ் பக்கம் வாய்ப்புகள் அனைத்து மொழிகளிலும் குவிகின்றனர்.
இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் சமந்தா Pratyusha என்னும் charitabke trust நடத்தி பல பேருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் ஏன் பல தெலுங்கு பிரபலங்களுக்கு பெரும் உதவி செய்து பல உயிரை காப்பாற்றி உள்ளார். சினிமாவில் நடிக்கின்ற பெரும்பாலான தொகையை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிறார்.
மேலும் பலர் உயிரை காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிட தக்கது. சமீபத்தில் நடிகை தேஜஸ்வி மடிவாடா சிறுவயதிலேயே தாயை இழந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அனாதையாக வளர்ந்த ஒரு கட்டத்தில் அவர் பல கஷ்டங்களை சந்தித்தார்.
உடலும் அவருக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை அவருக்கு டிபி நோய் தாக்கியிருந்தது அப்போது அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு உள்ள அந்த நேரத்தில் நடிகை சமந்தா தனது முழு மனதுடன் வந்து முழு செலவையும் ஏற்றுக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..