சமந்தா பக்கத்தில அமர இத்தனை லட்சமா? இதென்னடா கொடுமையா இருக்கு..

samantha
samantha

Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா அமெரிக்காவில் நடைபெற்ற குஷி படத்தின் ப்ரோமோஷன் பணியில் கலந்துக் கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு டிக்கெட் லட்சக்கணக்கில் விற்கப்பட்டுள்ளது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

குஷி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதனால் படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில அதே போல் நடிகை சமந்தாவும் அமெரிக்காவில் குஷி படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றுள்ளார்.

பொதுவாக ஒரு படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் அதற்காக எந்த ஒரு சம்பளமும் வாங்குவது கிடையாது. ஆனால் அமெரிக்காவிற்கு ப்ரமோஷனுக்காக சென்றிருக்கும் நடிகை சமந்தா நிகழ்ச்சிக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

சில மணி நேரங்கள் மட்டுமே நடந்த நிகழ்ச்சிக்காக நடிகை சமந்தா ரூபாய் 30 லட்சம் சம்பளமாக பெற்று இருக்கிறார். மேலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவின் ரசிகர்கள் கலந்து கொள்வதற்காக அழைப்புகள் கொடுத்துள்ளனர். அதுவும் இந்நிகழ்ச்சிக்கான என்ட்ரி டிக்கெட் குறைந்தது ரூபாய் 12000 முதல் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளதாம்.

சமந்தா வாங்கிய பெருந்தொகையாால் தான் இந்த டிக்கெட்டின் விலை அதிகரிப்பதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அதிக தொகையான ரூபாய் 2 லட்சம் டிக்கெட் வாங்கினால் அந்த நபர் சமந்தாவின் அருகில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். அப்படி இந்த டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே வெற்றி தீர்ந்துள்ளனர்.

இவ்வாறு இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக சமந்தாவின் அருகில் அமரவே 2 லட்சமா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி டாக்ஸியிலும் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.