கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திய சமந்தாவின் விவகாரத்து விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது அந்த வகையில் வெளிவந்த முடிவால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் இந்த இரண்டு மொழிகள் மட்டும் இன்றி பிறமொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் அந்த வகையில் சினிமாவில் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை நாகார்ஜுனாவின் மகனான சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவ்வாறு நடைபெற்ற இந்த திருமணமானது இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் விவாகரத்து செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
ஆனால் இவர்கள் என்ன காரணத்தினால் பிரிந்தார்கள் என்ற விடை மட்டும் இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இரு குடும்பத்தாரும் இவர்களை சேர்த்து வைக்க படாதபாடு பட்டுள்ளார்கள் ஆனால் இவர்கள் இருவரும் ஒத்துழைக்கவில்லை.
இந்நிலையில் ஜீவனாம்சம் குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாகர்ஜுனா குடும்பம் சமந்தாவிற்கு 200 கோடி ஜீவானந்தம் கொடுப்பதாக கூறியிருந்தார்கள். அதற்கு நடிகை சமந்தா எனக்கு எந்த ஒரு உதவியும் தேவை கிடையாது நான் சொந்தக் காலில் நிற்கிறேன் என்று கூறியுள்ளாராம் அவர்களுடைய விவாகரத்தை விரைவில் நீதிமன்றத்தில் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.