தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக இணைந்துள்ளார் மேலும் பல முக்கிய நடிகர் நடிகைகளும் சிறப்பான ரோலில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படம் அடுத்த ஆண்டு முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதற்குள்ளேயே விஜயின் அடுத்த 67வது பட எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளன அதற்கேற்றார் போல் நாளுக்கு நாள் தளபதி 67 படத்தின் அப்டேட்டும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
அதற்கான படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறாராம். அதன்படி இந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளி வருகின்றன. நடிகை சமந்தா இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வில்லி கதாபாத்திரத்தை தொடர்ந்து இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. ஆம் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் நடித்து பிரபலம் அடைந்த பிரியங்கா அருள் மோகன் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார் என ஒரு தகவல் உலா வருகின்றன .
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரியங்கா அருள் மோகன் ரஜினியின் 169 படமான ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.