நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா.. இப்போ ரொம்ப நம்பி இருப்பது இதைத்தான்.! இதோ பாருங்கள்

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.

அதனை தொடர்ந்து சமந்தா கையில் சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்கள் இருக்கின்றன ஆனால் இந்த சமயத்தில் தான் நடிகை சமந்தாவுக்கு myositis என்ற அரிய வகை நோய் தாக்கியது இதனால் அவர் படங்களில் நடிக்காமல் தொடர்ந்து வியாதியை குணப்படுத்த சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தா உடல் எடை குறைந்துள்ளது அழகு குறைந்துள்ளது என பலரும் விமர்சித்தனர். இந்த சமயத்தில்தான் சகுந்தலம் படத்தின் விழா ஒன்றில் சமந்தா கலந்து கொண்டார் அப்பொழுது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஒரு கட்டத்தில் அவர் அழுதுவிட்டார்.

அது பெரிய அளவில் வைரலானது அதனைத் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி இருகின்ற நிலையில் நடிகை சமந்தா ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது சமந்தா சகுந்தலம் பட நிகழ்ச்சிக்கு வரும்பொழுது கையில் ஜெபமாலை உடன் வந்தார் அதன் புகைப்படம் பெரிய அளவில் வைரலானது

அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோவிலும் நடிகை சமந்தா ஜெபமாலையை கையில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்..