தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக பார்க்கப்படுவர் சமந்தா. இவர் முதலில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே வெற்றி படங்களாக மாறியது மேலும் இவரது நடிப்பும் சூப்பராகஇருந்தது.
ஒரு கட்டத்தில் நடிகை சமந்தாவுக்கு டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் அதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் வளைத்து போட்டுக் கொண்டு அழகாக ஓடினார்.
சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்தார்களோ அதை அளவிற்கு நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷமாகத்தான் இருந்து வந்தார் ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் சமந்தாவுக்கு மேலும் ஒரு பிரச்சனை வந்தது ஆம் அவருக்கு புதிதாக ஒரு வியாதி வந்து தாக்கியது அதனை அடுத்து அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் உரையாடினார் அப்பொழுது பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒரு கேள்வியாக உங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளனர் அதற்காக அவர் சொன்னது முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் ஒரு ஹோட்டலில் எட்டு மணி நேரம் வேலை பார்த்தேன் என கூறினார். அந்த சமயத்தில் நான் 10 வது அல்லது 11வது தான் படித்துக் கொண்டிருந்தேன் என கூறினார். இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.