தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர். அந்தப் படம் வெளியாகி கலமையான விமர்சனத்தை பெற்று வந்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று விட்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
திருமணம் முடித்த பிறகு பிசியாக இருந்து வரும் நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா புது படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சமந்தா அவர்கள் திருமணம் ஆகி தாயாகும் என்ற ஆசையில் புது படங்களை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகை நயன்தாராவும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு தற்போது தன் கணவருடன் சேர்ந்து படங்களை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தை வளர்ந்த பின்பு மீண்டும் நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவாராம். திருமணம் முடிந்ததிலிருந்து குட் நியூஸ் எப்போது என அன்போடு ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி விட்டோம் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் புகை படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு சினிமாவில் நடிக்க வருவாரா மாட்டாரா என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.