தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது அதிக படங்களை கைப்பற்றி தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்தை தொடர்ந்து தெலுங்கில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
அதை வெற்றிகரமாக முடித்த கையோடு தற்போது மீண்டும் தெலுங்கில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் யசோதா என்ற புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சமந்தாவுக்கு ஹீரோவாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க இருக்கிறாராம்.
இந்த யசோதா திரைப்படத்தை இரண்டு இயக்குனர்கள் இயக்குகின்றனர். தெலுங்கு சினிமாவில் இயக்குனர்களாக வலம் வரும் ஹரி மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் இந்தப் படத்தை இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் சானலில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமந்தா நடித்து வரும் இந்த படத்தில் திடீரென தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடத்தப்படுவதால் ஷூட்டிங்கின்போது கலந்துகொண்டு வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறாராம்.
தெலுங்கில் இவர் ஏற்கனவே கிராக் என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு தெலுங்கிலும் தருவது நல்ல மார்க்கெட் இருந்து வருகிறதாம். இரண்டு நடிகைகளும் திறமையையும் தாண்டி சற்று கிளாமரை காட்டக்கூடிய நடிகைகள் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவல் எதிரி உள்ளது.