தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி போன்றவர்களுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது திரையரங்கிற்கு வர ரெடியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடல் ஒன்றிற்கு நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார். அந்தப் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டாகி உள்ளது.
மேலும் இந்த பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியதற்கு பல கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம். தற்போது சமந்தா தெலுங்கில் “சகுந்தலம்” “யசோதா” ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் “தி ஃபேமிலி மேன்” என்ற வெப் சீரியஸில் நடித்து வந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது அந்த வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் மற்றொரு தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.இப்படி இத்தனை படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தாலும் ஒருபக்கம் அவரது நண்பர்களுடன் இணைந்து ஊர் சுற்றி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அதனிடைய தற்போது அவரது தோழியுடன் இணைந்து சுவிஸ்சர்லாந் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.