விவாகரத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் நடிகை சமந்தா. தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாகவும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவ்வாறு மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் அவருடைய உடல் அதற்கு ஒத்துழைக்காமல் சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் என்ற அரிய வகை தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார்.
அதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் இன்னும் பூர்ணமாக சரியாகவில்லை. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் யசோதா படத்தில் நடித்து 50 கோடி வசூல் ஈட்டி இருந்தது இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான நிலையில் இதனை அடுத்து சமந்தாவின் சகுந்தலம் படத்திற்கான பிரமோஷனில் கலந்து கொண்டார்.
அதில் எலும்பும் தோலுமாக காட்சியளித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் உடலளவில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் சினிமாவை விட்டு விலகக் கூடாது என போராடி வருகிறார் எனவே தன்னுடைய உடல் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக பல கோடி இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் சமந்தா குழப்பத்தில் இருந்து வருகிறாராம். இப்படிப்பட்ட நிலையில் இரண்டு மாத காலம் உடல் நல பிரச்சனையினால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார் சமந்தா. விரைவில் குணமடைந்து விடும் என எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் 12க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடிக்க முடியாமல் தவிர்த்துள்ளார்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருக்கு 25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் தற்பொழுது அந்த வாய்ப்புகளும் கைவிட்டுப் போய் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விரைவில் சமந்தா குணமடைவார் என ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.