சமந்தா நடிப்பில் வெளிவந்த “யசோதா ” திரைப்படம் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

samantha
samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  முதலில் மாடலிங் துறையில் பயணித்து பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்றினார். முதலில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு நல்ல கதைகளை..

தேர்ந்தெடுத்து நடித்ததால் ஒரு கட்டத்தில் நடிகை சமந்தா விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி.. போன்ற நடிகர்களுடன் நடித்து தன்னை மிகப்பெரிய ஒரு நடிகையாக மாற்றிக்கொண்டார் மேலும் பட வாய்ப்புகள் பிற மொழிகளிலும் கிடைத்ததால் தென்னிந்தியா முழுவதும் தன்னை பிரபலப்படுத்தி ஒடினார்..

இப்படி ஓடிக்கொண்டிருந்த சமந்தா நிஜ வாழ்க்கையில் பல துன்பங்களும் துயரங்களும் பட்டு வருகிறார். இவர் முதலில் நாக சைதன்யாவை வீட்டு பிரிந்தார் அதனைத் தொடர்ந்து தற்போது சமந்தாவுக்கு மிகப்பெரிய ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது. இதனால் தீவிரமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தெலுங்கில் நடித்த யசோதா திரைப்படம் ஒரு வழியாக நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. சமந்தாவுடன் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத்ராஜ், முரளி, பிரியங்கா சர்மா, shatru, Divya sripada மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யசோதா திரைப்படம் முழுக்க முழுக்க இதுவரை பேசப்படாதவை குறித்தும் அதில் நடக்கும் முறைகேடு குறித்தும் யசோதா பெரிய அளவில் பேசி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் யசோதா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 3.20 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.