Actress Samantha: நடிகை சமந்தா நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக் கூறி பதிவிட்டு இருந்த திருமண புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சமந்தா மற்றும் நாக சைதன்யா இணைந்து விட்டார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். நான்கு வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சினை ஏற்படுத்திய நிலையில்மீண்டும் இவர்களை இணைவார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார். அப்படி சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டி சென்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது ஏராளமான ரசிகர்கள் நாக சைதன்யாவிடம் மீண்டும் சமந்தாவை சேருமாறு கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் சமந்தா விஜய் தேவர்கொண்டாவுடனும், நாக சைதன்யா சோபிதா துளிபாலா உடனும் டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து விவாகரத்தான உடனே சமந்தா நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார்.
இந்த சூழலில் தற்பொழுது திருமணத்தின் போது நாக சைதன்யாவின் கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன புகைப்படத்தை மீண்டும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்க முடிகிறது. எனவே நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகள், சீக்கிரம் ஒன்று சேருங்கள். என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.