நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் தெரியுமா என்பதை சமந்தா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு கோவிலில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
அதோடு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் விவாகரத்து செய்ய போகிறோம் என்ற தகவலை வெளியிட்டனர்.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு சமந்தாவும் மனமுடைந்த நிலையில் தன்னை தானே தேத்திக்கொண்டு தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவை பற்றி ஒரு பொது நிகழ்ச்சியில் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் சமந்தாவிடம் நாக சைதன்யாவை பற்றிய சில கேள்விகளை கேட்டார் அதற்கு சமந்தா எங்கள் படுக்கை அறையில் இருக்கும் ஒன்றுக்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணமாகிவிட்டது எனக்கூற லக்ஷ்மி மஞ்சு அது என்ன என்று விபரமாக கேட்டார்.
சமந்தா அதாவது தலையணைக்கும் நாக சைதன்யாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது அதுதான் அவரின் முதல் மனைவி நாங்கள் கட்டிப்பிடிக்கும் போது கூட தலையணையை இடையே இருக்கும். இதனை பொது நிகழ்ச்சியில் கூறுவதால் நாகசைதன்யா என்னை கொல்ல போகிறார் என்று கூறினார் சமந்தா.
இந்நிலையில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவிற்கு இடையே விவாகரத்து ஏற்பட்டதால் ரூ.200 கோடி ஜீவனாம்சம் தர முன்வந்தனர் ஆனால் எனக்கு அந்த பணம் தேவையில்லை என்றும் நான் இப்பொழுது நல்லாகத்தான் சம்பாதித்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார் சமந்தா. சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு குத்தாட்டம் போட்டதற்காக ரூபாய் 5 கோடி சம்பளத்தை பெற்றார் சமந்தா.