“ஊ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு நடிகரின் படத்தில் ஆட்டம் போட ரெடியான சமந்தா.?

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெருமளவு உயர்த்திக்கொண்டு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

இவர் திடீரென நாம் எதிர்பார்க்காத செயலை செய்துள்ளார்  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது அப்பா படம்  தமிழ், தெலுங்கு என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகியது.

அனைத்து மொழிகளிலும் புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி சுமார் 250 கோடிக்கு மேல் அள்ளியது. அதனைத்தொடர்ந்து இப்பொழுது  OTT தளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் புஷ்பா படத்திற்கான வசூல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்க காரணம் அந்த படத்தில் நடித்த டாப் நடிகர் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வெறும் மூன்று நிமிஷம் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு தம்மாதுண்டு  ஆடையை போட்டு கொண்டு செம குத்து குத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் நடிகை சமந்தா.

மேலும் அந்த பாடல் யூடியூபில் இப்பொழுது அதிக பார்வையாளர்களை கடந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா மீண்டும் தெலுங்கு ஹீரோவான விஜய் தேவர்கொண்டா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறாராம். இப்போது விஜய்தேவர் கோண்டா  நடித்துவரும் லைகர் படத்தில் சமந்தா தற்போது ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.