தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் இவருடைய நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் யசோதா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் வாடகத்தாய் பற்றிய முக்கிய தகவலை வைத்து இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
எனவே இது திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கோடிக்கணக்கில் வசூல் செய்தது. இப்படிப்பட்ட நிலையில் விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் யசோதா திரைப்படம் வெளியாகுவதற்கும் முன்பாக இவருக்கு தனக்கு மயோசிட்ஸ் எனப்படும் அரியவகை நோய் எதிர்ப்பு சக்தியை குறைபாடு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர் நோயுடன் யசோதா படத்தின் சிறப்பாக நடைபெற்று அதற்கான வெற்றி கிடைத்ததால் புத்துணர்ச்சி அடைந்தார்.
எனவே தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹார்ட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அதோடு மட்டுமல்லாமல் சில பேட்டிகளிலும் கலந்து கொண்டார். அதில் மிகவும் எமோஷனலாக பேசிய கண்கலங்கியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சமந்தாவிற்கு ஆதரவளித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான லைக்குகளை பெற்றிருக்கிறார். மேலும் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார் அந்த வகையில் தற்பொழுது ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.