விக்னேஷ் சிவன் முகத்தில் கேக் பூசி விளையாடிய சமந்தா – ஓரமா நின்னு வேடிக்கை பார்த்த நயன்தாரா.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்.

samantha
samantha

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து தனது திறமையையும், அழகையும் காட்டி அசத்தி தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக மாறியவர் நடிகை சமந்தா. குறிப்பாக தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது பயணத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

தெலுங்கிலும் அதேபோல டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தினார். இப்படி இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சமந்தாவுக்கு இப்பொழுதும் ஏராளமான படங்கள் கையில் இருக்கின்றன அந்த வகையில் சாகுந்தலம், யசோதா, காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்கள் இருக்கின்றன. ஆனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

புஷ்பா திரைப்படத்தை தொடர்ந்து  சமந்தா நடிப்பில் இப்பொழுது வெளிவர உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்  இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதி போன்றவர்களுடன் சமந்தாவும் நடித்துள்ளார். இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

அதைக் கொண்டாடும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன்,  நயன்தாரா, சமந்தா,விஜய் சேதுபதி ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது சமந்தா விக்னேஷ் சிவன் முகத்தில் கேக் பூசி கொண்டாடினார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kaathu vaagula rendu kadhal
kaathu vaagula rendu kadhal

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளை ஒருபக்கம் அள்ளி வீசி வருகின்றனர் அதேசமயம் நயன்தாராவை வெறுப்படைய செய்யும் வகையில் சில கமெண்ட்டுகளை ரசிகர்கள் போட்டு வருகின்றனர். நயன்தாரா இருக்கும் போதே சமந்தா விக்னேஷ் கேக் முகத்தில் பூசி கொண்டாடியது சிறப்பாக இருந்ததாக கூறி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

samantha
samantha
samantha
samantha