சம்பள விஷயத்தில் நயன்தாராவை தூக்கி சாப்பிட்ட சமந்தா.!

nayandhara and samantha
nayandhara and samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை பெரிதாக சொல்லும் அளவிற்கு இவரின் மீது சர்ச்சைகள் ஏற்படவில்லை அதேபோல் இவர் நடித்துள்ள திரைப்படங்களிலும் இவருக்கு எதிரான எந்த கருத்தும் எழுந்ததே இல்லை.

ஆனால் தற்போது இவர் நடித்துள்ள வெப் சீரியல் தி ஃபேமிலி மேன் 2 சீரியலின் மூலம் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார் சமந்தா. அதோடு இந்த சீரியலை தடை செய்யுமாறு அரசியல்  கட்சியினர்கள்,தொண்டர்கள் என்று பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வெப் சீரியலில் மனோஜ் பாய்பாஜ், பிரியாமணி,  சமந்தா உள்ளிட்ட பல முன்னணி பிரபல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள். அந்தவகையில் இந்த சீரியல் அமேசான் பிரைமில் நேரடியாக வெளிவந்தது. இந்த வெப் சீரிஸ் வெளிவந்த முதல் நாளிலிருந்து தற்பொழுது வரையிலும் பல பிரச்சனைகளை சந்தித்து.

இந்த வெப் சீரிஸ் 2 சீசன்களாக எடுக்கப்பட்டு 19 எபிசோட்டுலாக வெளியாகியுள்ளது. அந்தவகையில் இரண்டாவது சீசனில் மட்டும் ஒன்பது வெளிவந்துள்ளது.இப்படிப்பட்ட நிலையில் தி ஃபேமிலி மேன் 2, 9 எபிசோடுகளில் நடிப்பதற்கு சமந்தா 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இந்த சீரியலை குறித்து சமந்தா தமிழ் மக்களின் உணர்வுகளை உள்வாங்கி நடித்ததாகவும் ஈழத் தமிழர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை என்றும் கூறி உள்ளார்.

இவ்வாறு சமந்தா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில்  தற்பொழுது வரையிலும் 1.5 முதல் 2 கோடி வரை வாங்கி வந்த இவர் ஒரே ஒரு வெப் சீரிஸ் மூலம் அனைத்து முன்னணி நடிகைகளையும் ஓவர்டேக் செய்து 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

samantha 108
samantha 108

அந்தவகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக பட்சம் சம்பளமாக 7 கோடி வரை மட்டும்தான் சம்பளம் வாங்கி உள்ளார். எனவே இவரை விடவும் 3 கோடி அதிகமாக சம்பளம் வாங்கிய உள்ளார் சமந்தா.  இதன் காரணமாக இவருக்கு தொடர்ந்து வெப் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.அதோடு தற்போது உள்ள முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால்,வாணி போஜன், தமன்னா போன்றவர்களும் வெப் சீரிஸ் நடிப்பதற்கு துடித்து வருகிறார்களாம்.