தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.
இவர் கடைசியாக தெலுங்கில் ஓ பேபி திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் சூப்பர் டீலக்ஸ், ஜானு போன்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமந்தா திருமணத்திற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
இந்த நிலையில் சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் திரையுலகில் பிஸியாக இருந்து வந்தாலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது, புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களையும் செய்து வருகிறார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு லைவ் சாட்டில் பதிலளித்து வந்தார். அதில் ரசிகர் ஒருவர் ட்ரோல் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு சமந்தா அது எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. தூக்கமில்லாத இரவை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு சிரிப்பாக இருக்கிறது. நான் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளேன் என்பதைத்தான் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
#SamanthaAkkineni on how she handles social media trolls . .
She is a Rockstar @Samanthaprabhu2 😍😍😍😍 pic.twitter.com/3etk5nd5QS
— Anbu (@Mysteri13472103) January 26, 2021