தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருந்திற்கு பரிந்துரை செய்யப்பட்டார் இந்நிலையில் 2010ஆம் ஆண்டு பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி பிருந்தாவனம் நடுநிசி நாய்கள் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகரான விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருடன்ஜோடி போட்டு நடித்துள்ளார். சினிமாவில் மட்டும் நடிக்காமல் அதனை தாண்டி பல விஷயத்தில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா ஸ்கேட்டிங் பயிற்சி செய்து வருகிறார் ஸ்விட்சர்லாந்தில் அவர் கற்றுக் கொண்டிருக்கும் வீடியோக்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டு வருகிறார்.
சமந்தா நாகசைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களின் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை ஓரிரு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்தை அறிவித்துவிட்டார்கள் இந்தநிலையில் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை யாருமே கூறவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த பேட்டியில் பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து பேசியுள்ளார் பெண்கள் உண்மையிலேயே ரொம்ப ஸ்ட்ராங், உலகத்திலேயே மிக வலிமையான நிகழ்வு எதுவென்றால் அது குழந்தை பிறப்பு தான் அந்த வலியையும் பெண்கள் துணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தை பிறப்பின் பொழுது உச்சகட்ட வலியையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள் குழந்தை பிறந்த பிறகும் பல வலிகளை தாங்கிக் கொள்கிறார்கள் என பெருமையாக குழந்தை பிறப்பு பற்றி பேசியுள்ளார்.