தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது. அதோடு ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.
அந்த வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதோடு மற்ற நடிகைகளைப் போல் இவரின் மீது பெரிதாக சர்ச்சைகள் ஏற்பட்டது இல்லை.இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்தியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதில் தீவிரவாதியின் மகளாக நடித்திருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதன் காரணமாக மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்க உள்ளாராம்.
அதாவது சகுந்தலம் என்னும் புராண கதையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் வரும் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர்கள் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் மும்பையில் புதிய வீடு வாங்க போகிறார் என்ற தகவல் இணையதளத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.