தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர் சமந்தா. இவர் முதலில் பாணா காத்தாடி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே திறமை மற்றும் கிளாமரை காட்டியதால் இவருக்கான பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது. அதை சரியாக பயன்படுத்தி நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து தன் மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் ஒரு சமயத்தில் தமிழை தாண்டி தெலுங்கில் இவர் நடித்தார் அப்பொழுது தான் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார்.
நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது. அதன் பிறகு சினிமா தான் தனக்கு எல்லாம் என கருதி கொண்ட சமந்தா தொடர்ந்து படங்களில் குத்து டான்ஸ் மற்றும் ஹீரோயின்னாக நடித்து வெற்றிகளை கண்டார் இந்த நிலையில்தான் அறிய வகை நோய் ஒன்று அவரைத் தாக்க..
எட்டு மாதங்கள் அந்த நோயினால் ரொம்பவும் அவதிப்பட்டார் ஒரு வழியாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் சமந்தா தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் சமந்தா கைவசம் சாகுந்தலம், குஷி போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன. இதில் முதலாவதாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். முடித்துவிட்டு வெளியே வந்த சமந்தாவை போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர் ஆனால் சமந்தா போஸ் கொடுக்க முடியவில்லை காரணம் போட்டோகிராபர்கள் அடித்த ஃபிளாஷால் சமந்தா ரொம்ப அப்செட் ஆகிவிட்டார் அதன் வீடியோ தற்போது இணையதள பக்கங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
South superstar @Samanthaprabhu2 craze is massive in Bollywood 🥳🔥
Queen in Mumbai for #Shaakuntalam promotions 😎❤️🔥#ShaakuntalamIn3D#ShaakuntalamOnApril14 #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/w2lm0lWvvT
— SamAnu🦋{ShaakuntalamOnApril14th 🦢} (@SamzCraziestFan) April 6, 2023