samantha : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் ஒரு காலகட்டத்தில் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் இருவரும் சில வருடங்களிலேயே பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு அவரவர் தங்களுடைய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்கள் பேசிக் கொள்வதே கிடையாது.
அதேபோல் நடிகை சமந்தா நாகசைதன்யாவின் செல்ல பெயர் சாய் என தன்னுடைய வலது இடுப்பு பகுதியில் டாட்டுவாக வரைந்திருந்தார் அது மட்டும் இல்லாமல் அப்பொழுதைய காலகட்டத்தில் அவர் அதனை அறிவித்திருந்தார். அதேபோல் முதுகு பக்கத்தில் நாக சைதன்யா சமந்தா இவரும் இணைந்து நடித்த “ஏ மாயா சேவவே” என்ற திரைப்படத்தின் பெயரை குறிக்கும் வகையில் ஒய்எம்சி என்ற ஆங்கில வார்த்தையை டாட்வாக போட்டு இருந்தார்.
இப்படி நாகசைதன்யாவின் மீது அளவு கடந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக சமந்தா பல செய்கைகளை செய்து வந்தார் அதுமட்டுமில்லாமல் வலது மணிக்கட்டில் வைக்கிங் குறியீடு என்று சொல்லப்படும் ஒரு டாட்டுவை வரைந்திருந்தார் அதேபோல் நாக சைதன் யாவும் தன்னுடைய வலது மணிக்கட்டு பகுதியில் இதே டாட்டுவை போட்டு இருந்தார்.
அப்படி இருக்கும் நிலையில் தற்போது சமீபத்தில் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த போட்டோ சூட் புகைப்படத்தில் தன்னுடைய முன்னால் கணவர் பெயரை டாட்டுவாக குத்திருந்தது காணவில்லை அது மட்டும் இல்லாமல் அதனை அழித்துவிட்டாரா அல்லது போட்டோஷாப் மூலம் அதனை நீக்கி விட்டாரா என்று தெரியவில்லை.
அவர் தனது உடலில் குத்திய டாட்டூவை மட்டும் அழித்தாரா இல்லை மனதில் இருந்து நாக சைதன்யாவையும் அடியோடு அழித்துவிட்டாரா என்பது தெரியவில்லை ஆனால் டாட்டூ இல்லாததால் அப்போ எல்லாரும் சொல்லுவது உண்மைதானா என சமந்த ரசிகர்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.