இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பிறகு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.
மேலும் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பாவகதைகள் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் அவருடன் இணைந்து நயன்தாரா, சமந்தா ஆகிய இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள்.
நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது படத்தை செவண் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார். ரவுடி பிக்சர் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் விக்னேஷ் சிவன் அதை வீடியோவாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் சமந்தாவும் சூட்டிங்கில் இணைந்துள்ளார் அவரை வரவேற்ற விக்னேஷ் ஷிவனிடம் ஒழுங்கா எடுத்து விடுவீங்களா டைரக்டர் சார் என கிண்டலாக சமந்தா கூறியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் பார்ப்போம் என கூறினார். மேலும் விக்னேஷ் சிவன் சமந்தாவிடம் இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகாது அதனால் பொறுமையாக வாங்க எனக்கூறி கிண்டலடித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும் நயன்தாரா ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் அந்த படத்தை முடித்துவிட்டு காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப் படத்தில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.