பொதுவாக நடிகைகள் குறிப்பிட்ட காலம் வரை தான் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியும். பிறகு தனது இளமை குறைந்ததும் குணச்சித்திர நடிகை, துணை நடிகை, அம்மா போன்ற கேரக்டரில் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில் 2000 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் தனது கவர்ச்சியினாலும்,அழகினாலும் அனைத்து ரசிகர்கள் மனதிலும் ஜர் போட்டு உட்கார்ந்து அவர் நடிகை திரிஷா.
இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே விஜய்,அஜித், விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் தமிழ்,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. பிறகு தனது இளமை குறைந்ததால் படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்தது.
நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இவர் தற்பொழுது படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் த்ரிஷாவை விட தற்பொழுது உள்ள இரண்டு நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. திரிஷா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவாராம்.ஆனால் தற்பொழுது உள்ள சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருமே த்ரிஷாவை விட 50லட்சம் அதிகமாக 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை த்ரிஷாவே கூறியதால் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்களின் அளவிற்கு திரிஷாவும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் திரிஷா மட்டும் 50 லட்சம் ரூபாய் கம்மியாக வாங்கியுள்ளார் என்று ரசிகர்கள் சமன் செய்து வருகிறார்கள்.அதுமட்டுமல்ல இதில் த்ரிஷா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பற்றி கூறாததால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளார்கள்.