தீவிரமாக தற்காப்பு கலையை கற்று வரும் சமந்தா.. எதற்காக தெரியுமா.?

samantha
samantha

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. மேலும் சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவருடைய சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழினை தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கு, பாலிவுட் என தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமந்தா பேமிலிமேன் 2 என்ற வெப் தொடரின் மூலம் இந்தி திரைவுலகிற்கு பிரபலமானார். பிறகு இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தின் நயன்தாரா,விஜய் சேதுபதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

அந்த வகையில் இத்திரைப்படத்தில் சமந்தாவின் கேரக்டர் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அடுத்த வெப் சீரியலில் நடிப்பதற்காக சமந்தா தற்காப்பு கலைகளை கற்று வருகிறார். அதாவது ஃபேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடிப்பதன் மூலம் இந்தி திரை உலகில் பிரபலமான இவர் இதில் பெண் போராளியாக வந்து அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதனை அடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கம் இந்தி வெப் சீரியல் ஒன்றில் சமந்தா நடிக்க இருக்கிறார். மேலும் இவர் நடிக்க இருக்கும் இந்த சீரியலில் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்தொடரில் பெரும்பாலும் சமந்தாவுக்கு சண்டைக் காட்சிகள் இருப்பதால் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளும்படி படக்குழுவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது தற்காப்பு கலை பயிற்சியை தொடர்ந்து சமந்தா தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரபல தற்காப்பு கலைஞர்கள் மும்பைக்கு வந்து சமந்தாவிற்கு பயிற்சி அளிக்கிறார்கள். குத்துச்சண்டை,கராத்தே உள்ளிட்ட பல சண்டை பயிற்சிகளை கற்று வருகிறார் இந்த பயிற்சிகள் முடிந்தவுடன் படப்பிடிப்பில் இணையவுள்ளார் சமந்தா.