சமீப காலங்களாக ஏராளமான திரைப்படங்கள் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் முக்கியமாக இந்திய சினிமாவில் பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரமாண்டமான படங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் படங்களில் இடம்பெறும் ஒரு சில காட்சிகளுக்காக இயக்குனர்கள் பல கோடி செலவு செய்வதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை சமந்தா நடிப்பில் பான் இந்தய படமாக ரிலீஸ்சான சாகுந்தலம் படம் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவானது மகாபாரத புராணக் கதைகள் இடம்பெற்றிருக்கும் சாகுந்தலம் பெண்ணின் வாழ்க்கை வரலாறை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் கிட்டதட்ட 80கோடி ரூபாய் பொருள் செலவில் உருவாக்கியுள்ள நிலையில் இயக்குனர் குணசேகரன் இயக்க, தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்திருந்தார். இவ்வாறு சமந்தா தன்னுடைய சினிமா கேரியரில் முதன்முறையாக வரலாற்று கதையில் நடித்து இருக்கும் நிலையில் உடல்நிலை சரியில்லாத பொழுது கூட ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக் கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுக்கு தானே தன் குரலில் டப்பிங் செய்ததாகவும் அதில் தூய தமிழ் மொழியை பேசத்தான் தனக்கு கஷ்டமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நான் தலை, கை, கழுத்து என சூடியிருந்த பூக்கள் எல்லாமே உண்மையான பூக்கள் என்பதால் தனது கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் அந்த பூக்களின் வண்டுக்கள் பல நாட்கள் இருந்ததாகவும் கூறினார்.
இதனை அடுத்து ஒரு பாடலுக்காக சமந்தா இணைந்திருந்த ஆடையின் எடை மட்டும் 30 கிலோ வரை இருந்ததாம் அந்த வகையில் இந்திய சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒன்று சமந்தாவுக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்தது.
இதனை அடுத்து சாகுந்தலம் படத்தில் அதிகமாக கிராபிக்ஸ் விஸ்வல் காட்சிகளுக்கு மட்டுமே பல கோடி வரை செலவழித்ததாகவும், இந்த படத்தின் முக்கியமான சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடித்த சகுந்தலாவுக்கு உண்மையான தங்க, வைர நகைகளையும் தங்கத்தால் ஆன பட்டாடைகளையும் அணிந்திருந்தாராம். சகுந்தலா படத்தில் சமந்தா அணிந்திருந்த ஒட்டுமொத்த நகைகளின் மதிப்பு சுமார் 400 கோடி வரை உள்ளதாகவும் மேலும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கி உள்ளாராம்.