சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியானால் அதை பெரிய அளவில் வைரல் ஆக்கி விடுகிறார்கள். அப்படி நடிகை சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்டா பிரசன்னாவை 10 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரியா உள்ளதாக ஒரு செய்தி வெளியானது.
இதுகுறித்து பேசிய சினேகா இந்த வதந்திக்கு புகைப்படங்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த வதந்திக்கு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தான் காரணம் என்று ஒரு பேட்டியளித்துள்ளார் சினேகா. அது மட்டுமல்லாமல் தான் அதிகமாக தொகையை கேட்டதால் இப்படியான வதந்திகளை பரப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல நடிகை சமந்தாவை பற்றி தற்போது ஒரு வதந்தி பரவி வருகிறது அதாவது நடிகை சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு செய்தி நேற்றிலிருந்து வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்று சமந்தா தரப்பில் இருந்து கூறப்படுகிறது அதாவது சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மயோசிடிஸ் என்ற கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார் என்று ஒரு பக்கம் செய்தியை பரவி வருகின்றனர்.
மறுபக்கம் தற்போது சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி பரவி வருகிறது ஆனாலும் இது முழுக்க முழுக்க வதந்தி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வு எடுத்த பின்பு மீண்டும் சினிமாவில் சமந்தா நடிப்பாரா மாட்டாரா என்ற குழப்பம் ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது. சீக்கிரம் குணமடைந்து படங்களில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.