Samantha : மாடலிங் மூலம் பிரபலமடைந்த சமந்தா. “பாணா காத்தாடி” என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலிருந்து நடிப்பையும், கிளாமரை தூக்கி காண்பித்து பலரையும் திரும்ப பார்க்க வைத்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் அள்ளினார்.
அந்த வகையில் நான் ஈ, அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, மெர்சல், யசோதா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது. இப்படி ஓடிக்கொண்டிருந்த சமந்தா தெலுங்கு டாப் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நான்கு வருடங்கள் வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து வந்த ஜோடி சில பிரச்சனைகளின் காரணமாக இருவரும் பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதன் பிறகு சமந்தா சினிமா தான் தனக்கு எல்லாம் என்பதை உணர்ந்து கொண்டு அவர் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் தன்னை நம்பி வருகின்ற அனைத்திலும் நடித்து வருகிறார்.
அப்படி புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டு இருந்தார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் படும் ஆக்டிவாக இருக்கிறார் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்து வருகிறார்.
இதனால் ரசிகர்கள் அவரை அதிகமாக பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் தான் விஜய் தேவர்கொண்டா உடன் கைகோர்த்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் கோலாகலமாக வெளியாக இருக்கிறது .
இந்த நேரத்தில் சமந்தா கோல்டன் கலர் ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரெஸ்ஸில் சும்மா தேவதை மாதிரி ஜொலிக்கிறீங்க எனக் கூறிய கமெண்ட் அடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.