ஏழைப் பெண்ணுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய பரிசை கொடுத்த சமந்தா. அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய சோகமா.!

samantha-latest
samantha-latest

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.  பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு சிலர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவார்கள் ஆனால் சமந்தா அப்படியெல்லாம் பண்ணாமல் தற்பொழுது தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன்  காத்துவாக்குல ரெண்டு காதல்  என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 2.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி தந்து ஆட்டோ ஓட்டுனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  சமந்தா சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றார்.

அந்நிகழ்ச்சியில் பெண் ஆட்டோ ஓட்டுநர் எனது அம்மா இறந்ததற்கு பிறகு எனது ஏழு தங்கைகளையும் நான் தான் ஆட்டோ ஓட்டி அனைவரையும் பார்த்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.அவ்வப்போது சமந்தா கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கே தெரியாமல் சமந்தா 2.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி அவருக்கு தந்த இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.  இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள்.