தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமாக நமது நடிகை நடிக்கும் தெலுங்கு திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் பாடகி சின்மயி தான் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்தார் அந்த வகையில் இனிமேல் சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது எனக் கூறிய பேட்டி சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சின்மயி. இவ்வாறு பிரபலமான நமது பாடகி பாடல்கள் பாடுவது மட்டுமில்லாமல் பின்னணி குரல் கொடுப்பதும் வழக்கம் தான் அந்த வகையில் சமந்தா காஜல் அகர்வால் தமன்னா திரிஷா போன்ற நடிகைகளுக்கு இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கில் தானே சொந்தமாக டப்பிங் செய்து வருகிறார் இனி சமந்தாவுக்கு டப்பிங் குரல் தேவைப்படாது என பாடகி சின்மயி அவர்கள் தன்னுடைய சமூக வலைதல பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என்னுடைய பயணம் இனிமேல் முடிய போகிறது என்று அவர் கூறியுள்ளார் ஏனெனில் என்னுடைய நெருங்கிய தோழியாக இருக்கும் சமந்தா தானாகவே டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார் இனிமேல் எனக்கு அந்த வேலை இருக்காது என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சின்மயி கூறிய தகவல் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் சமந்தாவின் குரல் இனிமேல் திரைப்படத்தில் ஒலிக்க போகிறது என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.