தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை சமந்தா. தொடர்ந்து டாப் ஹீரோக்கள் மற்றும் சோலோ படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் தக்க வைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். நடிகை சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தமிழில் கடைசியாக நடிகை சமந்தா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது இதில் சற்று கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகள் மனதில் இடம் பிடித்தார் சமந்தா. அதன் பின் தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும்..
தெலுங்கில் மூன்று நான்கு படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக நடிகை சமந்தா ஹிந்தி பக்கம் படையெடுப்பார் என சொல்லப்படுகிறது தற்போது மூன்று, நான்கு படங்களில் அங்கும் கமிட்டாகி உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை சமந்தா ஹிந்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் மேலும் ஹிந்தியில் பிரபல நிகழ்ச்சியான koffee with karan என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா மற்றும் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் பேசி உள்ளார் அதன் ப்ரோமோ வீடியோ கூட தற்பொழுது வெளிவந்து வைரலாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.
நடிகை சமந்தாவும், ஹாலிவுட் பிரபலம் அக்ஷய குமாரும் சேர்ந்து புஷ்பா பட பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரெஸ்ல கூட செம்மையா ஆடுறீங்க எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
The Cool 😎 and the Killer 🔥 raising temperatures in the house! #HotstarSpecials #KoffeeWithKaranS7 episode 3 starts streaming on 21st July. @karanjohar @akshaykumar @Samanthaprabhu2 @apoorvamehta18 @aneeshabaig @jahnvio @Dharmatic_ pic.twitter.com/QMXB0KBwab
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 20, 2022